ஒரே நைட்ல சேற்றில் புதைந்த வயநாடு.. ரூ.1 கோடி கொடுத்து உதவிய 80ஸ் கதாநாயகிகள்..!
கடந்த ஜூலை 30-ம் தேதி கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவு காரணமாக பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதில், இதுவரை 350-க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வயநாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், ராஷ்மிகா மந்தனா, விக்ரம், மோகன் லால், மம்முட்டி, சூர்யா, ஜோதிகா, கார்த்திக், பிரபாஸ் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் தொடர்ந்து வயநாடு மக்களுக்காக உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது திரையுலகில் 80களில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த குஷ்பூ, லிஸி, மீனா, சுகாசினி ஆகியோர் கேரள முதல்வர் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடியை வழங்கியுள்ளனர். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.