ஷங்கரால் காலியான கஜானா.. பொறுத்தது போதும் என ஆக்ஷனில் இறங்கிய லைக்கா..!

12-minutes-cut-in-indian-2-movie

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படமாக பார்க்கப்பட்டது இந்தியன் 2 படம். 28 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கர் கமலஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியானது. பெரும் பொருட் செலவில் தயாரான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

12-minutes-cut-in-indian-2-movie

ஆனால், இப்படத்திற்கு கிடைத்த ரிசல்ட் வேறு. கதை காட்சி அமைப்பு நடிப்பு, இசை, என அனைத்து ஏரியாக்களிலும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. மேக்கப்புக்கு பெயர் பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலஹாசனின் கெட்ப் திருப்தி அளிக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தது. PROSTHETIC MAKEUP மேக்கப் என்ற ஒரு முறையை தமிழ் சினிமாவுக்கு கமலஹாசன் அறிமுகப்படுத்திய போது அது குறித்த விழிப்புணர்வு பெரும்பாலும் கிடையாது.

12-minutes-cut-in-indian-2-movie

அன்றைய காலத்திலேயே அதை திறமையுடன் கையாண்ட ஷங்கர் இந்தியன் 2 படத்தில் அதை எப்படி கோட்டை விட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தது. இது மட்டுமின்றி, படத்தின் நீளமும் மூணு மணி நேரம் ஒரு படத்தின் மைனசாக பார்க்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து, நெகடிவ் விமர்சனங்களே அதிகரித்து வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கிய லைக்கா அதில் 12 நிமிட காட்சிகளை குறைத்துள்ளது. இது குறித்த லைக்கா தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளது.

Share this post